15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

அத்துடன், வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய வழக்கின் போது, பிரதிவாதியான அமைச்சர் விமல் வீரவன்ச, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றின் காரணமாக இன்று சமூகமளிக்கவில்லை எனவும், அடுத்த வழக்கின் போது பிரசன்னம் ஆகுவார் எனவும் பிரதிவாதி சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்

அமைச்சர் விமல் வீரவன்ச, 2010 முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அமைச்சராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், வருமானத்திற்கு அப்பால் 75 மில்லியனுக்கும் மேலதிகமான சொத்துக்கள் மற்றும் நிதியை சேகரித்ததாக கூறி, குறித்த வழக்கத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததது.

இந்த வழக்கு, கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு