மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் பொதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, காவல்துறை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றை , மத்திய தபால் பரிமாற்ற நிலைய அதிகாரிகள் நேற்றைய தினம் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அந்தப் பொதியிலிருந்து 502 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப் பொருளின் பெறுமதி 7.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதியைப் பொறுப்பேற்பதற்காக வருகை தந்திருந்த 29 வயதையுடைய சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கைமைய, சந்தேகநபர் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..