எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை பெற முயற்சித்து பிரதமர் வேட்பாளர் பதவியையும் பெற முயல்வது மீண்டும் தோல்வியடைவதற்காகவே என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளது
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருந்தால் அந்த தோல்வியுடன் அவரது அரசியல் நிறைவு பெற்றிருக்கும்.
அப்படி நடந்திருத்தால் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகியிருப்பார்.
தோல்வியுறும் தேர்தலில் பலவந்தமாக வேட்பாளர் பதவியை பெற்று அதில் போட்டியிட்டு சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறந்த வெற்றியை பெறுவார்.
எனவே எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி பெறுவது உறுதியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..