ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பணியாளர்கள் உள்பட 138 இந்தியர்கள் இருந்துள்ளனர்.
இவர்களில் 3 பேருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அவர்களின் உடல்நிலை முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் கப்பலில் மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது மருத்துவ பரிசோதனையில் நேற்று உறுதியானது.
அவர்கள் உடனடியாக கடலோர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..