ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கூட்டணிக்கு samagi jana balavegaya ஏன பெயரிடப்பட்டுள்ளதாகவும், சின்னம் தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணிக்கு யானை சின்னத்தை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்பினரால் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும், சட்டபூர்வமான நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த குழுவின் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுகூட்ட நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..