09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ப்ளூ வேல் சேலஞ்ச்-க்கு அடுத்தபடியாக வந்துள்ள ஸ்கல் பிரேக்கர்

உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வகை சேலஞ்ச் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அது எத்தகைய ஆபத்தான சேலஞ்ச் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கை, கால்களைக் கிழித்துக்கொள்ளும் `ப்ளூ வேல் சேலஞ்ச்', ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் `கிகி சேலஞ்ச்', பக்கெட் நிறைய குளிர்ந்த தண்ணீரை நிரப்பி உடலில் ஊற்றிக் கொள்ளும் 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' போன்றவை சமூக வலைதளங்களில் பரவி இளசுகளை பாடாய்படுத்தியது.

இதுபோன்ற சேலஞ்சுகளில் அவ்வப்போது பிரபலங்களும் ஈடுபட்டதால் பலரையும் ஈர்த்தது. ஆனால், அதன் ஆபத்தை உணராமல் இதுபோன்ற சேலஞ்சுகளில் ஈடுபடுவதால் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது தான் இந்த ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச். பார்ப்பதற்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் உள்ள இந்த சேலஞ்ச் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விளையாடப் பட்டு வருகின்றது.

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் எனப்படுவதன் அர்த்தம் மண்டையை உடைக்கும் சேலஞ்ச். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகம் பகிரப்படும் இந்த சவாலை 3 நபர்கள் கொண்டு செய்கின்றனர்.

வரிசையாக மூவர் நிற்க நடுவில் இருக்கும் நபர் குதிக்கும் பொழுது இடது புறம் மற்றும் வலது புறம் இருக்கும் நபர்கள் கால்களால் தட்டி விட வேண்டும்.

குறிப்பிட்ட அவ்வீடியோவில் பள்ளி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை தள்ளி விட ஏதுவாக ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆபத்தான இந்த விளையாட்டு மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சேலஞ்சை, விளையாட்டாக கூட யாரும் ஈடுபடாதீர்கள் எனவும், இதுபோன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் ஈடுபடாமல் தடுக்குமாறு பெற்றோர்களுக்கும் வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.





ப்ளூ வேல் சேலஞ்ச்-க்கு அடுத்தபடியாக வந்துள்ள ஸ்கல் பிரேக்கர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு