தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாக்குப் பட்டியலில் இதயத்தின் சின்னம் இல்லை என்பதால், எவரேனும் இதயம் சின்னத்தை கோருவார்களாயின், அவர்களுக்கு அந்த சின்னத்தை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படாவிடினும் அதன் அமைப்பில் மாற்றம் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அவர்களுக்கு உண்மையான இதயத்தின் தோற்றமுடைய சின்னத்தையே வழங்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரையில் யானை சின்னத்தை அகற்றுமாறு ஐக்கிய தேசிய கட்சியினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.













0 Comments
No Comments Here ..