நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வேகமாக தயாராகிவருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்குமாருக்கு சண்டைக் காட்சியில், கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவ முதலுதவி மட்டும் செய்து கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்தார். எனினும் அஜித்திற்கு காயம் ஏற்பட்ட செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியது.
வலிமை படத்தில் அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்து வைக்கும் வகையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துகொண்டுள்ளார்.
சென்னை லீலா பேலஸில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் அஜித் கலந்துகொண்டுள்ளார்.
திருமணத்திற்கு வந்தவர்களை வாசலிலேயே நின்று வரவேற்று, இது தன்னுடைய குடும்ப திருமணமே என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் தல.
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
0 Comments
No Comments Here ..