தெலுங்கு சினிமாவின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பலரின் மீது பாலியல் புகார்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருவது சர்ச்சையாகி வருகிறது.
அண்மையில் இவர் குணச்சித்திர நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷும் பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகின்றனர் என அதிர்ச்சியாக பேசியிருந்தார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட இருவரும் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது தெலுங்கானா மாநில சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதில் எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் மீது சமூகவலைதளத்தில் ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருகிறார் என கூறியுள்ளனர். இதனால் ஸ்ரீ ரெட்டி மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி கைதாகும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
0 Comments
No Comments Here ..