அசுர வேகத்தில் உயிர்களை காவுக்கொண்டு வரும் கொரோனா வைரஸால் இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவரின் தந்தையான 78 வயதான முதியவர் ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக படுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக, இத்தாலி சுகாதார அமைச்சர் ராபார்ட்டோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் கட்டுமான நிறுவன உரிமையாளர் அட்ரியானோ ட்ரெவிசன் என இத்தாலிய செய்தி நிறுவனமான அன்சா பெயரிடப்பட்ட இந்த நபர், இத்தாலியில் உறுதிப்படுத்தப்பட்ட 18 நோயாளிகளில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது லோம்பார்டியில் 16 இத்தாலியர்கள் மற்றும் வெனெட்டோவில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
28 இற்க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால், சீனாவை தவிர்த்து ஹொங்கொங், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..