இந்தியாவுக்கு நாளை வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அகமதாபாத் முதல் ஆக்ரா வரை பங்கேற்கவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (பிப்ரவரி 24) இந்தியா வரவுள்ளார். தனி விமானம் மூலம் நேரடியாக அவர், குஜராத் மாநிலத் தலைநகரான அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு ட்ரம்ப் வருகிறார். அங்கு அவருக்கு பிரம்மநாதம் எனப்படும் சங்கு முழக்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
அதைத்தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் 150 அடி நீள சிவப்பு கம்பளத்தில் அளிக்கப்படும் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் ட்ரம்ப், அங்கு குஜராத் மாநில நாட்டுப்புற கலைஞர்களின் பாரம்பரிய நடனங்களையும் சில நிமிடங்கள் கண்டுகளிக்க உள்ளார்.
அதையடுத்து, விமான நிலையத்திலிருந்து மொதிரா எனுமிடத்துக்கு காரில் பயணித்தப்படி ட்ரம்ப் சென்றடைய உள்ளார். இதையொட்டி, விமான நிலையத்திலிருந்து மொதிரா வரை சாலைகள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
மேலும், சாலையில் இருமறுங்கிலும் 70 லட்சம் பேர் முதல் ஒரு கோடி பேர் வரை, ட்ரம்ப் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் உள்ள சுவர்கள் மோடி, ட்ரம்ப் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலையில் ஆங்காங்கே மோடி, ட்ரம்ப் உருவங்கள் பொருந்திய கட் -அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.
மொதிரா சென்றடையும் ட்ரம்ப், அங்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து தமது இந்திய பயணத்தின் முக்கிய நிகழ்வாக, மொதிரா மைதானத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கும் "நமஸ்தே ட்ரம்ப்" நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தமது குடும்பத்துடன் ஆக்ரா செல்கிறார். அங்கு, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, மனைவி, மகளுடன் ட்ரம்ப் கண்டு களிக்கவுள்ளார்.
தாஜ்மஹாலை சுற்றி பார்த்துவிட்டு, அங்கிருந்து டெல்லி புறப்படும் ட்ரம்ப், அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் இரவு தங்குகிறார்.
முன்னதாக, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்லும் ட்ரம்ப், அங்கு அரை மணிநேரம் செலவிட உள்ளார்.
0 Comments
No Comments Here ..