10,Jun 2026 (Wed)
  
CH
உலக செய்தி

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் - மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

உள்நாட்டு படைகளுடனும், அவற்றுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்க படைகளுடனும் மோதி வருகிற தலீபான் பயங்கரவாதிகளுடன் இந்த மாதம் 29-ந் தேதி ஒப்பந்தம் செய்துகொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஒரு வார கால சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அது நேற்று நடைமுறைக்கு வந்தது. இது உள்நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

குண்டு வெடிப்புகளாலும், துப்பாக்கிச்சண்டைகளாலும் அவதியுற்று வந்த மக்களுக்கு சண்டை நிறுத்தம் பெருத்த நிம்மதியை அளித்துள்ளது. அவர்கள் தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 2001-ம் ஆண்டுக்கு பிறகு தலீபான்கள், ஆப்கானிஸ்தான் படைகள், அமெரிக்க படைகள் என முத்தரப்பினரும் சண்டை நிறுத்தம் செய்து கொண்டிருப்பது இது 2-வது முறை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.




ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் - மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு