09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸ் அச்சம் : ஆஸ்திரிய எல்லையில் நிறுத்தப்பட்டது இத்தாலிய ரயில்!

இத்தாலியில் இருந்து ஆஸ்திரியா செல்லவிருந்த ரயில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஹொங் கொங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 152 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமையினை இத்தாலிய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இத்தாலியின் வெனிசில் இருந்து ரயில் ஒன்று அண்டை நாடான ஆஸ்திரியா நாட்டின் முனிச் நகருக்கு சென்றுகொண்டிருந்தது.

அதில் இரண்டு பயணிகளுக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் ஆஸ்திரிய அதிகாரிகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் ரயிலை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆஸ்திரியாவின் எல்லையில் உள்ள இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரின்னீர் பாஸ் நிலையத்திலேயே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.





கொரோனா வைரஸ் அச்சம் : ஆஸ்திரிய எல்லையில் நிறுத்தப்பட்டது இத்தாலிய ரயில்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு