20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

புதிய கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சஜித்திற்கு இல்லை – ரணில்!

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் இறுதி முடிவாகவே இருக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகி ஜன பலவேகய, சிறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளது என சஜித் பிரேமதாச நேற்று அறிவித்திருந்தார்.

குறிப்பாக பல கட்சிகளின் ஆதரவை தாங்கள் பெற்றுள்ளதாகவும் அதன் பிரகாரம் எதிர்வரும் 2 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இவ்வாறு செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க பிரேமதாசவிற்கு தெரிவித்துள்ளார் என அறிய முடிகின்றது.

புதிய கூட்டணியின் அரசியலமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர்கள் சில மாற்றங்களை முன்மொழிந்து அதை பிரேமதாசவடம் ஒப்படைத்தனர்.

இருப்பினும் இந்த முன்மொழிவுகளுக்கு இன்னும் சஜித் பிரேமதாச பதிலளிக்கவில்லை என்றும் அறிய முடிகின்றது.

ஆனால் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு பிரேமதாச பதிலளிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.





புதிய கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சஜித்திற்கு இல்லை – ரணில்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு