29,Apr 2024 (Mon)
  
CH
சுவிஸ்

கொரோனாவால் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது சுவிஸ் அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுவிட்சர்லாந்தில் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கண்காட்சிகள் என அனைத்தும் ரத்து செய்துள்ள நிலையில், அனுமதிச் சீட்டுக்கான கட்டணத்தை திருப்பித் தர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் உள்விவகார அமைச்சர் அலைன் பெர்செட் வெள்ளிக்கிழமை அன்று செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மொத்த விழாக்களும் ரத்தாகியுள்ள நிலையில், அதற்குரிய கட்டணத்தை திருப்பித் தர முடியாது என அமைச்சரால் உத்தியோகப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடுமையான நடவடிக்கைகள் பெரிய பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதன் அமைப்பாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டுள்ள என்று தற்போதைய சூழலில் அதிகாரிகளால் மதிப்பிட முடியாது எனவும்,

பொதுமக்களின் ஆரோக்கியத்தில் முழு கவனமும் தற்போது செலுத்தப்படுகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர் லாந்தில் ஆயிரம் பேருக்கு மேல் கூடும் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்,

இந்த நடவடிக்கையானது எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அரசு தரப்பு அறிவித்துள்ளது.

இதனால் பிரதானமாக பாசல் பகுதியில் நடைபெறவிருந்த பெருவிழா, ஜெனீவா கார் கண்காட்சி மற்றும் இந்த வார இறுதியில் நடைபெறவிருந்த கால்பந்து விளையாட்டு ஆகியவை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




கொரோனாவால் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது சுவிஸ் அரசு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு