இத்தாலியிலிருந்து வருகைதரும் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளைய தினம் முதல் விசேட சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
அத்துடன், தொடர்ந்து 14 நாட்களுக்கு அவர்களை அவதானத்திற்கு உட்படுத்துவதற்கு அவசியமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோய்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலி மற்றும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், இலங்கையர்கள் நாடுதிரும்புவது அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம், காய்ச்சல் அறிகுறிகளுடன், 6 மருத்துவமனைகளில் 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் தொற்றுநோய் விசேட மருத்துவர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் 5 பேரும், நீர்கொழும்பு ஆதார மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
அத்துடன், குருநாகல் போதனா மருத்துவமனையில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 2 பேரும் சிகிச்சைபெற்று வருவதாக விசேட மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..