ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி, அவ்வாறு செய்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனிநபர் பிரபல்யப்படுத்ததை தான் விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..