சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான தாயார் ஒருவர், இனி தமது மகனை ஆசையாக முத்தமிட முடியாமல் போனதே என கண் கலங்கியுள்ளார்.
பாஸல் நகரின் Riehen பகுதியில் குடியிருக்கும் Dodik குடும்பமானது கடந்த வியாழக்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கியுள்ளது.
இப்பகுதியில் உள்ள சிறார் காப்பகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் இளம் தாயார் அனிதா தோதிக்.
இத்தாலியின் மிலன் நகருக்கு சென்று திரும்பிய அனிதாவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனால் அனிதா குடும்பம் தங்களது குடியிருப்பிலேயே முடங்கியுள்ளது. இந்த நாட்களை சமையல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு செலவிட முடிவு செய்துள்ளதாக அனிதா தெரிவித்துள்ளார்.
மேலும், அனிதாவின் 3 வயது மகன் இவானோவுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது ஒரு விசித்திரமான உணர்வு என தெரிவிக்கும் அனிதா, நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதை இன்னும் உணரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது மகன் இவானோவுக்கு இருமல் மற்றும் சில தொண்டை பிரச்சினைகள் உள்ளன, ஆனால் இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களாக இருந்திருக்கும் எனவும் அனிதா கூறுகிறார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்கள் குடியிருப்புக்கு விருந்தினர்கள் வருவதை தடைசெய்யப்பட்டுள்ளனர்.
வேறு வெளிப்படையான விதிமுறைகள் எதுவும் இல்லை என கூறும் அனிதா, நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்ய சுகாதாரத் துறையுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஒரே குடியிருப்பில் ஒன்றாக இருந்தாலும், அடுத்த 2 வாரங்கள் தமது மகனை ஆசையாக முத்தமிட தம்மால் முடியாது என 31 வயதான அனிதா கண்கலங்கியுள்ளார்.
0 Comments
No Comments Here ..