ரி.ரி.சி போக்குவரத்து சேவையின் பிரஸ்டோ கட்டணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு 10 சதங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பிரஸ்டோ கட்டணம் பெரியவர்களுக்கு 3.20 அமெரிக்க டொலர்களும், மூத்தவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு 2.25 அமெரிக்க டொலர்களுமாக இருந்தது.
தற்போது புதிய கட்டண அதிகரிப்பு மூலம் பெரியவர்களுக்கு 3.25 டொலர்களாகவும், மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் 2.30 டொலர்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பெரியவர்களுக்கு மாதாந்திர பேருந்து கட்டணம் 4.85 டொலர்களால் அதிகரிக்கப்பட்டு 156 டொலர்களாக உள்ளது.
மாணவர்களும் மூத்தவர்களும் மாதாந்திர பேருந்து கட்டணம் 5.70 டொலர்களால் அதிகரிக்கப்பட்டு 128.15 டொலர்களாக உள்ளது.
0 Comments
No Comments Here ..