வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கிழ் உரிய தகைமைகள் அடிப்படையில் 45 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நியமனம் பெறும் பட்டதாரிகளுக்கு பயிற்சி காலத்தின் போது 20 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும் பயிற்சியின் பின்னர் ஓய்வூதியம் பெறும் வகையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த நியமனத்தை பெறும் பட்டதாரிகள் நியமனம் வழங்கப்பட்ட மாவட்டங்களில் 5 வருடங்கள் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..