21,Nov 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு கொரோனாவைரஸின் பாதிப்பு உள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரிக்க 

நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் அமலில் இருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் அடிக்கடி வெளியே வருவதைக் காண முடிகிறது. இதனைத் தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 649ஆக உயர்ந்துள்ளது - சுகாதாரத்துறை அமைச்சகம்

காஷ்மீரில் கோவிட்-19 பாதிப்பிற்கு முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீநகர் மருத்துவமனையில் 65 வயதான நபர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரளாவில் ஒரு நோயாளியின் மூலம் 20 நிமிடங்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இவர் துபாய் சென்றுவிட்டு கடந்த 16ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார். இவரை தனிமைப்படுத்துவதற்குள் மனைவி, குழந்தை, தாய் உள்ளிட்டோர் சந்தித்துள்ளார்.

லாக் டவுன் காரணமாக தினசரி எல்.பி.ஜி சிலிண்டர் புக்கிங் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வீட்டிற்குள்ளே அதிக நாட்கள் இருக்க வேண்டி இருப்பதால் ஏராளமானோர் சிலிண்டர் புக்கிங் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்கள், ஆம்புலன்ஸ், மருத்துவர்களுக்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. லாக் டவுன் உத்தரவு காரணமாக அவசரகால பயணத்திற்கு இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர். பின்தங்கிய மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இலவசமாக வழங்கியுள்ளார்.

 மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பேருந்துகள், ட்ராம்கள், மெட்ரோக்கள் அனைத்தும் லாக் டவுன் உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.

* ஜம்மு காஷ்மீரில் செய்தித்தாள்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாங்குவதை தவிர்ப்பதால் 80,000 வரை விற்ற செய்தித்தாள்கள் தற்போது 15,000 மட்டுமே விற்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்தித்தாள் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

* சண்டிகரில் வீட்டிற்கே சென்று பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

* கோவாவில் 3 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 25 வயதாகும் நபர் ஸ்பெயினிற்கும், 29 வயதாகும் நபர் ஆஸ்திரேலியாவிற்கும், 55 வயதாகும் நபர் அமெரிக்காவிற்கும் சென்று வந்துள்ளனர்.

* மேற்குவங்க மாநிலம் பங்குரா கிராமத்தில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் கட்டுமான ஊழியர்கள் நலத்துறை வாரியத்தில் பதிவு செய்துள்ள நபர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றின் இரண்டு தவணைகளையும் உடனடியாக விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் நயாபாத்தில் 66 வயதாகும் முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

 இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள மெடிக்கல் மற்றும் பாரா மெடிக்கல் ஊழியர்களின் பணிக் காலம் நீட்டித்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிறைக் கைதிகள் பரோலில் வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

* இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள மெடிக்கல் மற்றும் பாரா மெடிக்கல் ஊழியர்களின் பணிக் காலம் நீட்டித்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிறைக் கைதிகள் பரோலில் வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

* புதுச்சேரியில் லாக் டவுன் உத்தரவை மீறியதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான் குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு காய்கறிகள் அளித்ததாக கூறப்படுகிறது.




தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு கொரோனாவைரஸின் பாதிப்பு உள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு