11,May 2025 (Sun)
  
CH
BREAKINGNEWS

கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு!

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (02) அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வறுமையினால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக தாய் தனது குழந்தையை இவ்வாறு கிணற்றில் வீசியுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான், சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதுடன், அந்த பெண்ணின் கணவனுக்கு இது நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஈ.ஏ.டபிள்யூ. எதிரிசிங்கவின் ஆலோசனையில், பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மில்ரோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு