14,May 2025 (Wed)
  
CH
WORLDNEWS

பூமிக்கு வந்த லேசர் சிக்னல் – மர்மம் உடைத்த நாசா!

விண்கலத்திலிருந்து லேசர் சிக்னல் பூமிக்கு வந்துள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் சிறுகோள்கள் குறித்து நாசா பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.

அந்த வரிசையில், சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய 2023ல் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியிருந்தது. அதனை, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே நிலை நிறுத்தியுள்ளது.

விண்வெளியில் இருந்து ரேடியோ அலைவரிசை மூலமாக சிக்னல்கள் பெறப்படும் நிலையில், லேசர் தகவல் பரிமாற்றத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் அதிலிருந்து லேசர் சிக்னல் பூமிக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து அந்த விண்கலம் தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போன்று 1.5 மடங்கு. மேலும், சைக் விண்கலத்தின் ரேடியோ டிரான்ஸ்மிட்டருடனும் தொடர்பு கொண்டு அதில் வெற்றியடைந்துள்ளது. இதனால், விண்வெளியில் இருந்து தகவல் மற்றும் தரவுகளை நேரடியாக பூமிக்கு அனுப்ப முடிந்தது. இந்த திட்டத்தின் இலக்கை விட 25 மடங்கு கூடுதலான விகிதத்தில் தரவுகளைப் பரிமாறி சாதனை படைத்துள்ளது.

அதனுடன், சைக் 16 சிறுகோளை நோக்கிய தன்னுடைய பயணத்தில் தொடர்ந்து, நிலையாக மற்றும் இயல்பாக சைக் ஈடுபட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.




பூமிக்கு வந்த லேசர் சிக்னல் – மர்மம் உடைத்த நாசா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு