சில அரிதான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் தாக்கும். அதுபோன்று ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலைக்கு விட்டிலிகோ என்று பெயர்.
இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தது. இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களை ரெடிட் தளத்தில் பதிவிட, அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
0 Comments
No Comments Here ..