பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷாரா ஜயவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறை நாட்களாகக் கருதப்படும் 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் வினவியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..