ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன்படி தற்போதுவரை ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,009பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,656பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 94பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 221,344ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 179,534பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 39,801பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..