15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

விளையாட்டு வீரரை காதலிக்கும் நடிகை

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் மற்றும் நாம் சபானா, பட்லா, மிஷன் மங்கள் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன.

கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். டாப்சிக்கு தற்போது 32 வயது ஆகிறது. இவர் வெளிநாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரை காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதற்கு பதில் சொல்லாமல் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒருவரை காதலிக்கிறேன் என்றும், அவரை பற்றிய விவரத்தை சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது காதலர் யார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாஸ் போயேவை காதலிக்கிறேன். இந்த காதலை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என் காதலரை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர் ஏற்க மறுத்தால் காதல் பயனற்று போகும்” என்றார்.




விளையாட்டு வீரரை காதலிக்கும் நடிகை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு