15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

வாழைச்சேனையில் கொரோனா தொற்று நீக்கும் நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப் படையினரால் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் காணப்படும் இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை ஃ மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அலுவலகம், வாழைச்சேனை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம், வாழைச்சேனை கமநல சேவை திணைக்களம், பேருந்து தரிப்பு நிலையம், பேருந்துகள், வங்கிகள் உட்பட மக்களின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறப்பட்டது.

வாழைச்சேனை விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பிரேமரத்ன வழிகாட்டலில் இராணுவ பரிசோதகர் எஸ்.எஸ்.வி.பன்டார தலைமையிலான விசேட அதிரடிப் படையினர்கள் கலந்து கொண்டு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறப்பட்டது.




வாழைச்சேனையில் கொரோனா தொற்று நீக்கும் நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு