08,May 2024 (Wed)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்


மேஷம்

  • மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்

  • கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

சிம்மம்

  • சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

கன்னி

  • கன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள் வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

துலாம்

  • துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோ கத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

  • தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் வரும் நாள்.

மகரம்

  • மகரம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

  • கும்பம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் .

மீனம்

  • மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு