ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டிலிருந்து பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.
குறித்த கொடுப்பனவு உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது, ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் , தமது கட்சியை வலுப்பெறச் செய்யும் வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை குறித்த கொடுப்பனவு குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..