06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

சாத்தியமான மருந்து சோதனையை ஆரம்பிக்கின்றது பிரித்தானியா!

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க உதவும் சாத்தியமான மருந்து சோதனையை, இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சோதனை செய்ய பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

அரசாங்கத்தால் விரைவாகக் கண்காணிக்கப்பட்டு இந்த ஆய்வுகள், முதற்கட்டமாக 15 தேசிய சுகாதார மையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

ரெம்டெசிவிர் என்று அழைக்கப்படும் இந்த மருந்து கிலியட் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் இரண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் ஒன்று மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளிடமும், இரண்டாவது தீவிர நிலையில் இருப்பவர்கள் மீதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சீனாவிலும் அமெரிக்காவிலும் ஏற்கனவே சோதனைகள் நடந்து வருகின்றன. முதல் முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவின் சோதனைகள், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தை மையமாகக் கொண்டு, தொற்று நோய்களுக்கான ஆலோசகரான டாக்டர் ஆண்ட்ரூ உஸ்டியானோவ்ஸ்கி மேற்பார்வையிடலில் இடம்பெறும்.




சாத்தியமான மருந்து சோதனையை ஆரம்பிக்கின்றது பிரித்தானியா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு