கோவிட் 19 தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மக்கள் தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழியர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகைள நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி வருகை தந்திருந்தனர்.
இதேவேளை வடமாகாணத்திற்குட்பட்ட ஜந்து
மாவட்டங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை,மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போல இடம்பெற்றிருந்ததுடன் வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்காக அதிகளவான பொதுமக்கள் பேருந்து நிலையத்தை நோக்கிவருகைதந்திருந்தனர்
பொது நிறுவனங்கள் மற்றும் தனியார்நிறுவனங்களின் வாயிலில் கைகளை கழுவி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவளை அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கண்காணிப்பதற்கு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
0 Comments
No Comments Here ..