சென்னையில் தொடர்ந்து பல வாரங்களாக கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வந்த நிலையல் தற்போது 1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,257 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1% ஆகும். மேலும் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 400 க்கும் குறைவானோரே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 217,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 210,410 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 3,257 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும்.
கொரோனா பாதித்தவர்களில் 61.18 சதவீதம் பேர் ஆண்கள், 38.82 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
திருவிகநகர், அண்ணநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகயி நான்கு மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..