22,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இதுவரை 23,304 குடும்பங்கள் யாழில் பாதிப்பு

யாழில் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக ஏற்பட்ட தாழமுக்கத்தினை தொடர்ந்து ஏற்பட்ட புரெவி புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

புரெவி சூறாவளிதாக்கம் மற்றும் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை23304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் குறித்த சீரற்ற காலநிலையின் தாக்கத்தின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் காயம் அடைந்துள்ளார்கள்.

சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை 94 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. 3024 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மற்றும் சிறு மற்றும் மத்திய முயற்சியாளர்கள் 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 27 வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. தற்போது 21 இடைத்தங்கல் முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தில் கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தில்பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.




இதுவரை 23,304 குடும்பங்கள் யாழில் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு