23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் தடுக்கும் முகமாக எதிர்வரும் 30 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்துடன் இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடக்கு கடல் பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தி தடுக்கும் முகமாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ளதாகவும் அதற்குரிய முன்னேற்பாடாக வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்கள் உடனான விசேட சந்திப்பு இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் இந்திய இழுவை மடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கூட்டத்தில் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நீண்ட காலமாக வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள். எனினும் கடந்த காலங்களில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கா விட்டாலும் தற்போதுள்ள அரசாங்கத்தினால் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு அனைத்து மீனவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்க உள்ள விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் மீனவர்களுடன் தான் கலந்துரையாடி உள்ளதாகவும் அதன் மூலம் தெரிவிக்கப் பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்த அமைச்சர் மேலும் எதிர்வரும் தினங்களில் குறித்த பேச்சுவார்த்தையின் மூலம் அத்துமீறி எமது கடல்பிரதேசத்திற்குள் நுழையும் மீனவர்களின் வருகைக்கு ஒரு தகுந்த முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் வினவிய போது,

குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு செய்தியை அனுப்பி இருந்தார்கள். எனினும் அவர்கள் நேரடியாகவோ சந்திக்க விரும்பவில்லை. எனினும் தான் அதற்கு எழுத்து மூலம் குறித்த விடயத்தினை தெரியப்படுத்தினால் அதனை பரிசீலிக்க முடியும் என தெரிவித்திருந்தேன்.

ஏனெனில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றோர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு வழங்குமாறு தெரிவித்திருந்தார்கள். எனினும் ஊடகங்கள் வாயிலாக அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கருத்துக்களை முன் வைத்து இருந்தார்கள். அதன் காரணமாகவே நான் எந்த விடயம் என்றாலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுமாறு கோரியிருந்தேன் எனினும் அவர்கள் அதனை செய்யவில்லை.

எனினும் வரவுசெலவுத்திட்டம் தினத்தன்று காலையில் மாநகர முதல்வர் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை எமக்கு ஆதரவு வழங்குமாறு அனுப்பியிருந்தார் எனினும் அது தொடர்பில் நான் கால தாமதமாகி விட்டது எனவும் தெரிவித்திருந்தேன்.

இதேவேளை, இன்றைய தினம் கடல்வள முயற்சியாளர்கள் அமைச்சினூடாக கடன் பெற கோரிக்கை வைத்தவர்கள் ஏழு பேருக்கு காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது.




எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு