04,Dec 2024 (Wed)
  
CH
சினிமா

பரபரப்பை ஏற்படுத்தும் சித்ராவின் தோழி!

சினிமாத்துறையில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை விவகாரம். சீரியலில் சில காட்சிகளால் சித்ராவிற்கு அவரது காதல் கணவர் டார்ச்சர் கொடுத்து ஓட்டலில் செத்து தொல என்று கூறியதால் தற்கொலை செய்து கொண்டார் என்று போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் ஆர்டிஓ போலிசார். இந்நிலையில் சித்ரா பணியாற்றி அதே தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் இருந்து தற்போது நடிகராக இருக்கும் ரக்‌ஷன் பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது.

ரக்சனும் சித்ராவும் சில நாட்கள் டேட்டிங்கில் இருந்ததாக சித்ராவின் தோழி வீடியோ மூலம் கூறியுள்ளது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், இருவரும் ஒரு ரெசார்ட்டுக்கு சென்று தனிமையில் இருந்ததை ரக்சன் ரகசியமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு சித்ராவை மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணமான பிறகும் சித்ராவை தொடர்ந்து ரக்சன் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் தான் கூப்பிட்டு வரவில்லை என்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதுபோல் மொத்த கேஷும் ரக்சன் பக்கம் திரும்பியுள்ளது. சித்ராவின் நெருங்கிய தோழி இந்த செய்தியை வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லவர் போல் வேஷம் போட்டு இவ்வளவு நாள் நடித்துள்ளாரா என ரக்சன் மீது தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.




பரபரப்பை ஏற்படுத்தும் சித்ராவின் தோழி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு