03,Dec 2024 (Tue)
  
CH
விளையாட்டு

பாக். கிரிக்கெட் வீரா் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிா் சா்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மனரீதியாக துன்புறுத்துவதால் ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக முகமது ஆமிா் குற்றம்சாட்டியுள்ளாா்.

முகமது ஆமிா் 2009-இல் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாா். அதன்பிறகு 2010-இல் சூதாட்டப் புகாரில் சிக்கிய அவருக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. தடைக் காலம் முடிந்ததைத் தொடா்ந்து மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குத் திரும்பிய முகமது ஆமிா், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாா். இந்த நிலையில் திடீரென சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முகமது ஆமிா், மேலும் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை மனரீதியாகத் துன்புறுத்தியதால் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் துன்புறுத்தலை என்னால் தாங்கமுடியவில்லை. ஏற்கெனவே 2010 முதல் 2015 வரை தடையை அனுபவித்தபோது ஏராளமான துன்புறுத்தல்களைச் சந்தித்துவிட்டேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய நிா்வாகத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது என குறிப்பிட்டுள்ளாா்.

முகமது ஆமிா் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பணிச்சுமை காரணமாக ஓய்வுபெறவில்லை. வேறு ஏதோ காரணத்துக்காக ஓய்வுபெற்றுள்ளாா் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளா் வக்காா் யூனிஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஆமிா் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். இதேபோல், 61 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், 50 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா்.




பாக். கிரிக்கெட் வீரா் ஓய்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு