04,Dec 2024 (Wed)
  
CH
சினிமா

உங்களாலதான் எனக்கு எல்லா பிரச்சனையும் என்பார்' சித்ரா குறித்து கதறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்

நடிகை சித்ரா மரணமடைந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அவர் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.

மக்கள் டிவிவியில் விஜேவாக பணியை தொடங்கியவர் விஜே சித்ரா. அதனை தொடர்ந்து சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பெரும்பாலான தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றியுள்ளார்

தொடர்ந்து சின்னப்பாப்பா பெரியபாப்பா , வேலு நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் சித்ரா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான் அவருக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது.

முல்லை கேரக்டரில் அப்பாவி மருமகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். அந்த சீரியலில் நடிக்க தொடங்கியதில் இருந்து பலரும் தன்னை தங்களின் வீட்டு மருமகளாகவே பார்க்க தொடங்கிவிட்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார் சித்ரா

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி நடிகை சித்ரா நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருந்த போதும் சித்ராவின் மரணம் தொடர்பாக நாள் தோறும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி பிரபலம் ஒருவரை நடிகை சித்ரா காதலித்ததாகவும் அவருடன் ரெசார்ட்டில் தனிமையில் இருந்ததாகவும் புதிய பூதம் ஒன்று கிளம்பியுள்ளது.

தனிமையில் இருந்ததை அந்த பிரபல நடிகர் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சித்ராவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தான் அழைக்கும் போதெல்லாம் வராவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார் அந்த நடிகர்.

திருமணத்திற்கு பிறகும் அவரது டார்ச்சர் தொடர்ந்ததாகவும் இதனால் எந்த நேரத்திலும் அந்த வீடியோக்களை தனது கணவரான ஹேமந்திடம் காட்டி விடுவார் என்ற பயத்திலேயே சித்ரா இருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் குமரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சித்ரா குறித்த பல தகவல்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார் குமரன்.

அவர் பேசியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம், இப்போ சித்ரா எப்படி இறந்துபோனார் என்பதை பற்றி நான் பேச வரவில்லை. அதைப் பற்றி பேசுவதால் அவர் திரும்பி வர போவதில்லை. ஆனால் சித்ரா தன்னுடைய நல்ல நண்பர் ஒருவரிடம் தனது பர்சனல் விஷயங்களை ஷேர் செய்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தால் சித்ரா இப்போது நம்மோடு இருந்திப்பார் என கதறினார். சித்ரா ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வார். ஆனால் நான் அப்படி இல்லை. நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக அதிக நேரம் செலவிடுவேன்

இதனால் நான் கொடுக்கும் தேதிகளில் சித்ராவும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவருக்கு வேறு வேலை இருக்கும் போது நான் தேதி கொடுப்பதால் அவரும் வரவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் உங்களால் தான் எனக்கு எல்லாப் பிரச்சனையும், நீங்கபாட்டுக்கு தேதி கொடுத்துடுவீங்க.

எனக்கு அந்த நேரத்தில் வேறு நிகழ்ச்சிகள் வருகிறது என்று சொல்வார் என சித்ராவுடன் ஒன்றாக நடித்தது அவர் பேசியது உள்ளிட்ட தகவல்களை குமரன் கதறியப்படியே கூறியுள்ளார். நடிகர் குமரனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்த சித்ரா நடிகர் குமரனுக்கு ஜோடியாக இருந்தார். அந்த சீரியலில் எடுக்கப்பட்ட ஒரு முத்தக்காட்சிதான் அவரது கணவரான ஹேமந்த்துக்கு பிடிக்காமல் பெரும் பிரச்சனையானது என்றும் இதனால் சீரியலில் நடிக்கக்கூடாது என அவர் தடைவிதித்தாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.





உங்களாலதான் எனக்கு எல்லா பிரச்சனையும் என்பார்' சித்ரா குறித்து கதறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு