இலங்கையில் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்றினால் நாட்டில் இருபத்து ஐந்து வீதமானவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
உலக உணவுத் திட்டத்தின் எச்சரிக்கை குறித்து நீர்ப்பாசன அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
உணவுப் பிரச்சினைகயை எதிர்நோக்கக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையையும் உலக உணவுத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.
உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
எனவே மாற்று வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், குளங்கள் புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..