இந்நிலையில் குறித்த பகுதியில் குளித்தல், மீன்பிடித்தல் நடவடிக்கைகள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதிக்குள் இவ்வாறு வான் பாய்கின்ற காட்சிகளை பார்வையிடுவதற்காக வருந்து ஏற்படுகின்ற அநியாய உயிரிழப்புகள் மற்றும் நோய் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, மக்கள் அனாவசியமாக அந்த பகுதிக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதி வான் பாய்கின்றன நேரத்தில் மிக அழகாக காட்சி அளிக்கின்ற போதும் குறித்த குளத்தின் பகுதிகள் மற்றும் துருசு பகுதிகளில் வருகை தந்து நீர் ஆடுகின்ற மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் செயல்பாடுகளில் அநியாய உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இவ்வாறான நடவடிக்கைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்திக் கொள்ளுமாறு மக்களை சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..