16,Apr 2025 (Wed)
  
CH
சினிமா

சமுகவலைத்தளத்தில் நடிகை நடிகர்களின் ட்விட்டர் பதிவு

திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது. இப்போது கொரோனாவை சீனா வைரஸ் என்று அழைக்கிறோம். அது சினிமா வைரஸ் என்ற பெயரை எடுக்க வேண்டுமா? எனறு கேள்வி எழுப்பியள்ளார்.

கஸ்தூரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளித்த அரசுக்கு நன்றி. இதன் மூலம் சினிமாதுறை செழிக்கும். திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று எங்கும் இல்லை. உங்கள் பயம் புரிந்து கொள்ளக்கூடியது. உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கஸ்தூரி மீண்டும் குஷ்புக்கு பதில் அளிக்கும் விதமாக, "நான் என்னை பற்றி கவலைப்படவில்லை. மக்களை பற்றி கவலைப்படுகிறேன். அவர்கள் உடல் நலன் முக்கியம். தியேட்டர்களுக்கு செல்பவர்களால் வீட்டில் இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர ஓட்டல்களே பாதிக்கும்போது தியேட்டர்களில் எப்படி பாதுகாப்பு இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இயக்குனரும், நடிகையும், சமூக ஆர்வலரும் ஆகிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திரை உலகத்தினால் டாக்டர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை எனவும், போக்குவரத்து வழக்கம் போல இயங்குகிறது ஆனால் மக்கள் கவலை இன்றி தான் வாழ்கிறார்கள். இருந்தாலும் மக்களின் உடல் நலம் மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ள அவர், தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி மட்டுமே வழங்கலாம்.

அப்படி திரை உலகம் வாழ வேண்டும் என விரும்பும் பெரிய ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ளட்டும். இதன்மூலம் தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதையும் குறைக்கலாம், அந்த வகையில் தொழிலையும் நடத்த முடியும். மேலும் தினசரி ஊதியம் பெறக்கூடியவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் கொடுக்க முடியும். இவ்வாறு செய்வதால் 50% அனுமதியிலேயே தேவையான வருவாயையும் பெற இயலும் என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த்சாமி அவர்கள், சில நேரங்களில் 50% என்பது 100% விட சிறந்ததாக இருக்கும். அவற்றில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். திரையுலகினர் மகிழ்ச்சியுடன் திரையரங்குகளில்100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்றுள்ள நிலையில், அரவிந்த்சாமியின் இந்த ட்விட்டர் பதிவு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.




சமுகவலைத்தளத்தில் நடிகை நடிகர்களின் ட்விட்டர் பதிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு