08,Apr 2025 (Tue)
  
CH
சினிமா

பிக்போஸ் நிகழ்ச்சியில் நான் பேசிய நிறைய விசயங்கள் ஒளிப்பரப்பவில்லை கடும் ஆதங்கத்தில் அனிதா சம்பத்

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா தமிழ் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதைப் போல் இந்தமுறை தமிழகத்தைச் சேர்ந்த அனிதா சம்பத் பங்கேற்றார். இந்த சீசனில் போட்டியாளர்கள் குழுவாக விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்த போது அதில் சேராமல் தனியாக தெரிந்த அனிதா சம்பத், வீட்டில் எழுந்த ஒவ்வொரு பிரச்னையையும் தனியாளாகவும், துணிச்சலாகவும் சமாளித்தார்.

எதற்கெடுத்தாலும் அதிகம் பேசுகிறார், பிரச்னையை பெரிதாக்குகிறார் என்றெல்லாம் அனிதா மீது மற்ற போட்டியாளர்கள் குறை கூறினாலும், சுமங்கலிகள் முதலில் வர வேண்டும் என்ற அர்த்தத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதற்கு சரியான பதிலடி கொடுத்து கமல்ஹாசனின் பாராட்டைப் பெற்றார். அதுமட்டுமின்றி 'இரத்தக் கண்ணீர்' எம்.ஆர்.ராதாவாக பிக்பாஸ் வீட்டில் அனிதா நடித்துக் காட்டியதும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து கடந்த டிசம்பர் 28-ம் தேதி 10-வது போட்டியாளராக குறைந்த வாக்குகளைப் பெற்று அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது தான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பேசிய சில முக்கியமான தகவல்கள் ஒளிபரப்பப்படவில்லை என்று அனிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியுள்ளதாவது, ''நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு முக்கிய தலைப்புகளில் பேசினேன். ஆனால் அவை எதுவுமே ஒளிபரப்பப்படவில்லை. மற்ற போட்டியாளர்களுடன் நான் பேசிய முக்கிய நிகழ்வுகளும் ஒளிபரப்பாகவில்லை.

திங்கள் கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றியும், செவ்வாய்க்கிழமை திருநங்கைகளின் தரம் உயர்வது பற்றியும், புதன்கிழமை பிச்சை எடுப்பவர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்தும், வியாழக்கிழமை விவசாயம் பற்றியும், வெள்ளிக்கிழமை விதவைகளின் மறுமணம் பற்றியும் பேசி இருந்தேன். ஆனால் இவை எதுவுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.

சமூகவலைதளங்கள் மூலம் விரைவில் நான் இது குறித்து பேச விரும்புகிறேன். இதற்காக எனக்கு உதவிக்கு சில நபர்கள் தேவைப்படுகிறார்கள். என்னுடன் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பிப்ரவரி மாதத்தில் இருந்து நாம் இதை தொடங்குவோம்' என்று அனிதா சம்பத் கூறியுள்ளார்.




பிக்போஸ் நிகழ்ச்சியில் நான் பேசிய நிறைய விசயங்கள் ஒளிப்பரப்பவில்லை கடும் ஆதங்கத்தில் அனிதா சம்பத்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு