15,May 2024 (Wed)
  
CH
சினிமா

இம்முறை பிக்போஸ் டைட்டில் வின்னர் ஆரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் தான் இந்த சீசனில் டைட்டில் வெல்ல தகுதியானவர் என பல்வேறு பிரபலங்கள் சொன்ன நிலையில், தற்போது ஆரிக்கு எதிராக விஜய் டிவியும் பிக் பாஸ் குழுவும் சதி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆடிப் பாடும் காட்சியில் காட்டப்படும் ஆரியின் ஃபிரேம் நேற்றைய எபிசோட் சீன் என்று கண்டனங்கள் வெளியாகி வருகின்றன. நிகழ்ச்சியில் எல்லா புரமோவிலும் ஆரியை கெட்டவனாக்கும் முயற்சியில் விஜய் டிவி ஈடுபடுகிறது என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்து முன் வைத்து வருகின்றனர். பிக்பாஸில் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆரிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதும் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடையே தான் மிகப்பெரிய போட்டி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே, மற்றவர்களெல்லாம் கிட்டத்தட்ட இவர்களது சண்டையையும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆரிக்கு சவாலாக பாலாஜியும் பாலாஜிக்கு சவாலாக ஆரியும் இருந்து வருகிறார்கள் என்பதும் இருவரும் வெளியே வந்தவுடன் மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆரியின் படங்கள் அனைத்தும் வெளியானால் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாலாஜிக்கு ஒரு பிரபல நிறுவனத்திடமிருந்து வாய்ப்பு வந்துள்ளது என தெரியவந்துள்ளது. அஜித் விஜய் உள்பட பல பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்த ஒரு பிரபல நிறுவனம் பாலாஜி வெளியே வந்தவுடன் அவர்தான் எங்களுடைய அடுத்த படத்தின் ஹீரோ என்று தெரிவித்து உள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிறுவனம் பாலாஜி வெளியே வந்தவுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படம் குறித்து அதிகாரம் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது




இம்முறை பிக்போஸ் டைட்டில் வின்னர் ஆரி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு