இலங்கை - தென்கொரிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை, சாகர காரியவசம், கௌரவ ஏ. அரவிந்த குமார் மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் இலங்கை - தென்கொரிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் பிரதித் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை - தென்கொரிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
கொரிய தூதுவர் வூஜின் ஜியோங் (Mr. Woonjin JEONG) மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் வூஜின் ஜியோங் ஆகியோர் இந்நட்புறவுச் சங்கத்தின் ஆலோசகர்களாக பணியாற்றுவார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் ஜே.சி. அலவதுவள ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் பிரதி செயலாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், மஹிந்த அமரவீர, எரான் விக்ரமரத்ன, குணதிலக ராஜபக்ஷ, காதர் மஸ்தான், கலாநிதி வீ. இராதாகிருஷ்ணன், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நிமல் பியதிஸ்ஸ, மஞ்சுளா திசாநாயக்க, ரோஹன பண்டார, கின்ஸ் நெல்சன், மாயாதுன்ன சிந்தக அமல், சம்பத் அத்துகோரல, மதுர விதானகே, எம்.டபிள்யு.டி. சஹன் பிரதீப் விதான, யதாமினி குணவர்தன, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, கருநாதாஸ கொடிதுவக்கு, இஷாக் ரஹுமான், அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நட்புறவுச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக பணியாற்றவுள்னர்.
0 Comments
No Comments Here ..