04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

காட்டுத் தீயாய் பரவும் உண்மை தகவல்! வியப்பில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.

வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது.

அதிலும் முக்கியமாக ஷிவாங்கிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அவர் அஸ்வினுக்காக செய்யும் குறும்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் லைவ்வில் வந்த ஷிவாங்கியடம் ரசிகர்கள் சிலர், சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷாலை பற்றி சொல்லுங்க என்று கேட்டபொழுது, "அவர் என்னுடைய நெருங்கிய தோழர். Boybestie என்று சொல்வார்களே அதுபோல. எதுவா இருந்தாலும் அவரிடம் பகிர்ந்து கொள்ளுவேன்.

வெளியே செல்வது என்றாலும் அவருடைய நண்பர்களையும் அழைத்து செல்வேன். ஜாலியாக இருக்கும்" என்பது போல் கூறியுள்ளார். "சாம் விஷாலை காதலிக்கிறீர்களா?"என்பது போல சிலர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்துள்ள ஷிவாங்கி சிரித்துக்கொண்டே "இல்லைங்க இல்லை.

எத்தனை தடவை சொல்வது நிறையபேர் இன்ஸ்டாகிராமில் கூட வந்து "ஒருவேளை அப்படி இருக்குமோ' என்று கேட்கிறார்கள். இல்லவே இல்லை" என்று தன் ஸ்டைலில் சிரித்துக்கொண்டே கூறுகிறார்.





காட்டுத் தீயாய் பரவும் உண்மை தகவல்! வியப்பில் ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு