15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இருக்கின்ற சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் பிரதேச செயலக மட்டத்திலிருந்து ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி - மார்ச் மாதம் வரையில் இந்த ஆட்சேர்ப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், வர்த்தக மற்றும் பொதுச்சேவை பிரிவுகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரிவுகளில் இணைந்துக்கொள்ள விரும்பும் தேக ஆரோக்கியமான ஆற்றல் மிக்க இளைஞர் பாதுகாப்பு படைத் தலைமையகங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

மேலும் ஆட்சேர்ப்பு பணிப்பகத்தினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, மத்திய, கிழக்கு பகுதிகளில் இருக்கின்ற பாதுகாப்பு படைத் தலைமையக மட்டங்களில் 2020, 22-31 ஆம் திகதிகளில் ஆட்சேர்ப்பு பணிகளுக்கான தொடர் விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் மேற்படி ஒவ்வொரு பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் பிரிகேட் படைப் பிரிவு தளபதியின் தலைமையில் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ், இராணுவ ஆட்சேர்ப்பு பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.ஏ.டி.என்.எஸ்.பி. துனுவில மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பதவி நிலை அதிகாரி - 1 லெப்டினன் கேணல் எம்.எல்.டி.மொல்லிகொட ஆகியோரின் தலைமையில் ஆட்சேர்ப்பு பணிகள் இடம்பெற உள்ள நிலையில் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறைந்தபட்சம் மூன்று இளைஞர்கள் இராணுவத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

எனவே, இராணுவத்தில் இணைந்துகொள்ள விரும்புவோர் அருகிலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தினை தொடர்பு கொண்டு வயதெல்லை,கல்வித் தகைமை என்பவற்றை தெரியப்படுத்தி, சம்பள விவரம், சலுகைக் கொடுப்பனவுகள் மருத்துவ சலுகைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

அல்லது அருகிலுள்ள இராணுவ படைப் பிரிவிற்கு நேரடியாக சென்று அங்கு ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளை சந்தித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளவும் முடியும்.

தொடர்புகளுக்கு:

தலைமையகம்- யாழ்ப்பாணம் - 011 4056102 / 076 5303715

தலைமையகம் - வன்னி (வவுனியா) - 076 6907293

தலைமையகம் – கிழக்கு (வெலிகந்த) - 027 2259128 / 076 6907297

தலைமையகம் – கிளிநொச்சி - 076 4514395 / 070 1918333

தலைமையகம் – முல்லைத்தீவு - 071 2138268

தலைமையகம்– மேற்கு (பனாகொடை) - 076 5303721

தலைமையகம் - மத்திய (தியதலாவை) - 076 6907304 / 0765303719

பணிப்பாளர் – ஆட்சேர்ப்பு பிரிவு(கொஹுவலை) - 011 2815080 / 011 3137553




இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு