உங்கள் திருமணத்திற்கு அழகான, கவர்ச்சியான தோற்றத்துடன் இருக்க விரும்புகிறீர்கள் என்றால், திருமணத்திற்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் முன்பிருந்தே உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கவும். அற்புதமான தோற்றம் கொண்ட உடலமைப்பைப் பெற, நிபுணர்களின் கருத்தைக் கேட்கிறார் மாதுரி வேலாகர்
உங்கள் திருமண நாளன்று, நிச்சயமாக மிகச்சிறப்பாக தோன்ற வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்கள் உடலை மிக அழகாக வெளிப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், சாதாரண டயட் அல்லது எளிமையான உடற்பயிற்சி முறைகளும் மட்டும் போதுமானதாக இருக்காது. உடலின் ஒவ்வொரு பாகத்தையும் டோன் செய்ய வேண்டும். உடல் அழகுபடுத்தல் நிபுணரான வனிதா அஷோக், “புதிய மணமகள்களுக்கு, வெயிட் டிரெயினிங்கை நாங்கள் பரிந்துரைப்போம். வாரம் ஒன்றிரண்டு முறைகள் மட்டும் 20 அல்லது 30 நிமிட பயிற்சிகள் மூலமாக எடையைக் குறைப்பதற்கு இது எளிமையான வழி. இந்த பயிற்சியில் உடலின் முதன்மையான தசைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், பல அங்குலம் தசைகளைக் குறைக்கலாம்.
இதன் இறுதி பலனாக டோன் செய்யப்பட்ட, அழகான, ஒல்லியான, ஃபிட்டான உடல் கிடைக்கும்” என்கிறார். “குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் அதற்கு நல்ல டயட்டும், சரியான அளவு உடற்பயிற்சியும் தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது 5 அல்லது 6 முறை 20 நிமிடங்கள் கால அளவு கொன்ட எக்ஸர்சைஸ் பயிற்சியை செய்யலாம். இந்த வெயிட் லாஸ் புரோக்கிராமை நீங்கள் திருமணத்திற்குப் பிறகும் செய்வதில் தவறொன்றும் இல்லை. ஒரு வாரத்தில் மூன்று முறை ஸ்டிரெந்த் டிரெய்னிங்கை செய்யலாம். உங்கள் உணவில் புரதத்தை மறக்காதீர்கள். ஒரு மாதத்தில் 2 கிலோ வரை குறைத்தாலே போதுமானது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட் ஜோட்ஸ்னா ஜான்.
பைசைக்கிள் ஆர்வலரும், நீச்சல் சாம்பியனுமான பூனம் சோனி, தினசரி பின்பற்ற வேண்டிய ஒட்டுமொத்த ஃபிட்னஸ் திட்டத்தைப் பரிந்துரைக்கிறார். இதில் நீச்சலும், சைக்கிளிங்கும் கூட இடம்பெற்றுள்ளன. “நீங்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஈடுபடுவது கூட, அதாவது பீச்சில் பந்து எறிந்து விளையாடுவதும் கூட, உங்களுக்கு உதவும். சைக்ளிங்கும், ஸ்விம்மிங்கும் என் உடலை டோன் செய்ய உதவியுள்ளன, இதனால் என் தொடைகளில் கொழுப்பு படிவது நின்றுவிட்டது. வாரம் இருமுறை கார்டியோ உடற் பயிற்சிகளும், வெயிட் டிரெயினிங்கும், சரியான தோற்றத்தைப் பெற உதவும். கலோரிகள் இல்லாதது என்று சொல்லும் பானங்கள் மற்றும் ஜங்க்ஃபுட்டிலிருந்து தள்ளியே இருங்கள்.”
குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரையிலாவது, உடற்பயிற்சி திட்டங்களைத் தொடர்ந்து பின்பற்றுங்கள், நிச்சயம் பலன்களை நீங்களே உணருவீர்கள்.
குறிப்பிட்ட உடல் பகுதிகளை குறிவைத்து, டோன் செய்யும் உடற்பயிற்சிகளை விளக்குகிறார் வனிதா அஷோக்:
டம்ப்பெல் லஞ்ச்
ஒரே முறையில், உடலின் கீழ் பகுதி தசைகள் அனைத்திலும் இம்பாக்ட் தரக்கூடிய உடற்பயிற்சி, மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, தொடை மற்றும் கெண்டைக் காலில் தசையைக் குறைக்கவும் உதவுகிறது.
தயார்செய்தல்
இரண்டு கைகளிலும் தலா 2 கிலோ டம்ப்பெல்ஸை ஹோல்ட் செய்து நிற்கவும்.
செய்முறை
1 வலது காலை ஒரு அடி முன்னோக்கி வைக்கவும்.
2 இடது காலின் முட்டியை வளைத்து, அது தரையைத் தொடும் வரை உடலை கீழே கொண்டு செல்லவும்.
3 இந்தப் பயிற்சி முழுவதும் வலது காலின் முட்டி 90மு கோணத்தில் வைத்திருக்கப்பட வேண்டும்.
4 அசல் நிலைக்குத் திரும்ப வர, வலது கால் முட்டி மற்றும் இடுப்பை வலுவாக அழுத்தி எழவும்.
5 இதைப் போல 10 முதல் 12 முறைகள் செய்துமுடித்ததும், கால்களை மாற்றி மீண்டும் செய்யவும்.
பைல் ஸ்குவாட்ஸ்
தொடை மற்றும் சீரற்ற தசை களை டோன் செய்கிறது
தயார்செய்தல்
உங்கள் தோள்பட்டையின் அகலத்தை விட அதிக அகலத்தில் கால்களை பரப்பி நிற்கவும். கால் விரல்களை வெளிப்புறமாக நீட்டி, கைகளில் 2 கிலோ டம்ப்பெல்ஸை வைத்துக் கொள்ளவும், உள்ளங்கைகள் உடலைநோக்கி திரும்பி இருக்க வேண்டும்.
செய்முறை
1 உங்கள் இடுப்பை பின்னோக்கி தள்ளுவதன் மூலம், உங்களைக் கீழ்நோக்கி தாழ்த்தவும், உங்கள் தொடைகள் தரைக்கு இணையாக மாறும் வரை உடலை தாழ்த்தவும்.
2 மூன்று எண்ணும் வரை அதே நிலையில் இருக்கவும். பின்னர் மெதுவாக தொடக்க நிலைக்கு திரும்பவும்
3 இந்த இயக்கத்தை 10 முதல் 16 முறைகள் செய்யவும்.
இதற்கு மாற்றாக, பின்வரும் முறையையும் பின்பற்றலாம்:
1 எடைகளை கையில் வைத்திருக்கும்போதே, உங்கள் குதி காலை உயர்த்தவும். பின்பு ஸ்குவாட் செய்யவும்.
2 குதிகாலை உயர்த்திய படியே, தொடக்க நிலைக்கு திரும்பவும்.
3 10 முதல் 12 முறைகள் இதைச் செய்யவும்.
0 Comments
No Comments Here ..