27,Nov 2024 (Wed)
  
CH
ஆரோக்கியம்

குணமளிக்கும் ஸ்பரிசம்

விலை அதிகமான கிரீம்களையும், ஆயில்களையும் உங்கள் உடலில் பூசி சிகிச்சை பெறும் இடம் தான் ஸ்பா என்று நினைத்திருந்தீர்கள் என்றால், உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டிய தருணம் இது. ஸ்பா சிகிச்சைகளில் இன்னும் பல விஷயங்களும் உள்ளன. ஸ்பா சிகிச்சைகள் பற்றியும் அவை அளிக்கக்கூடிய பலன்கள் பற்றியும் விரிவாக பார்ப்போம்

மூங்கில் மசாஜ்

ஒரு மூங்கில் தடியால் உங்கள் பின்புறத்தில் அடிப்பது என்பதைக் கேட்க ஒரு மாதிரியாக இருக்கலாம். இந்த சிகிச்சையை யாராவது உங்களுக்குப் பரிந்துரைத்தால் பயப்படத்தேவையில்லை. மூங்கில் மசாஜ் என்பது, உங்கள் முதுகெலும்பும், பெல்விக் எலும்பும் சேரும் இடமான சாக்ரோல்லியாக் ஜாயிண்டில் ஏற்படும் வலிகளைப் போக்கும் என்று அறியப்படுகிறது.

 இது மூங்கில் தடிகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படுகிறது. மூங்கிலில் உள்ள சிலிக்காவினால், சருமத்தின் மேல் அது மிருதுவாக உணரப்படும், மேலும் அதன் அழுத்தம், உடலின் மேலிருந்து கீழாக உருட்டப்படும்போது தசை முடிச்சுகள், பிடிப்புகள் மற்றும் அழுத்தத்தைக் குறைக்கின்றன.

இந்த நுட்பம் எளிதானது,- ஒரு தடிமனான உள்ளீடற்ற மூங்கில் தடி பாதிக்கப்பட்ட பகுதியில் உருட்டப்படும். அதன் அழுத்தம், இடுப்பு மற்றும் பின்புறத்தில் செலுத்தப்படும். இறுதியில், புட்டத்தில் வலுவாக அடிப்பதுடன் இந்த செயல்முறை நிறைவடையும்.

நிவாரணங்கள்: இது ஒருவகையான ஆழமான திசு மசாஜ் சிகிச்சை, மூட்டுகளைச் சுற்றிலும் உள்ள தசை பிடிப்பால் ஏற்படும் அழற்சிகளை சரிசெய்ய மிகவும் ஏற்றது.

பாதங்களுக்கான ரிஃப்ளெக்சாலஜி

நீங்கள் தினமும் கால்களால் நடக்கிறீர்கள், ஒவ்வொரு முறையும், ஒரு பஸ், ரயிலை விட பாதங்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள். ஆனாலும் உங்கள் பாதங்களைத் தான் அதிகமாக புறக்கணிக்கிறீர்கள். இதனால்தான் நீங்கள் பாதங்களுக்கான ரிஃப்ளெக்சாலஜியை அவசியம் செய்து கொள்ள வேண்டும். சீன மருத்துவத்தின்படி, உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகளின் உணர்வு நரம்புகள் பாதங்களில் தான் முடிவடைவதாக கூறப்படுகிறது, இதனால் ஃபுட் ரிஃப்ளெக்ஸாலஜி ஒரு தலைசிறந்த மசாஜ் தெரபியாக இருக்கும். இந்த மசாஜில், பாதங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் அழுத்தம் தருவதன் மூலம், அதன் ரிஃப்ளெக்ஸ்கள் தூண்டப்படுகின்றன.

நிவாரணங்கள்: இது வலி மற்றும் இறுக்கத்தைக் குறைக்கிறது. தலைவலி, மன அழுத்தம், ஆஸ்துமா, மலச்சிக்கல், சைனஸ் மற்றும் மைக்ரேய்ன் போன்றவற்றின் அறிகுறிகளைக் கூட இது சரி செய்யும்.

ஷிரோபயங்கா மசாஜ்

இந்த ஆயுர்வேத தலை மசாஜ் மன அழுத்தம் மற்றும் டென்ஷனை உருவாக்கும் பகுதிகளின் மேல் அதிக கவனம் செலுத்துகிறது-அதாவது, தலை, கழுத்து, முகம் மற்றும் தோள்பட்டைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு அழுத்தம் நிறைந்த வேலை நாளுக்குப் பிறகு தலை மசாஜ் எடுத்துக்கொண்டால் ரிலாக்ஸாக இருக்கும். சரியான அழுத்தத்துடன், ஆயுர்வேத எண்ணெய் மசாஜ் செய்யும் பயிற்சி வாய்ந்த தெரபிஸ்ட்டால் இந்த மசாஜ் செய்யப்படும். நீங்கள் இன்சோம்னியாவால் (தூக்கமின்மை) பாதிக்கப்பட்டிருந்தால், இந்த மசாஜ் நிச்சயம் பலனளிக்கும்.

மோசமான தலையணையால் ஏற்படக் கூடிய லேசான சுளுக்கு போன்றவற்றை நாம் பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறோம். -உங்கள் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படக் கூடிய சிக்கலான முடிச்சுகளை சரிசெய்யும்.

நிவாரணங்கள்: மன அழுத்தம், கவலை, தீவிரமான சோர்வு, செரிமான சிக்கல்கள், கொலிட்டஸ், மலச்சிக்கல், சோர்வு மற்றும் சைனஸ் போன்றவற்றின் அறிகுறிகளை சரிசெய்கிறது.

அல்கோதெரபி

கடற்பாசிகளைப் பயன்படுத்தி செய்யும் செயல்முறையே அல்கோதெரபி. இதில் ஏராளமான மினரல்களும், கடலின் உட்பொருட்களும் அடங்கியுள்ளன. என்சைம்கள், விட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள் போன்றவை உடலில் உற்பத்தியாவதற்கும், மனித உடல் செல்கள் செயல்படுவதற்கும் இந்த உட்பொருட்கள் அவசியமானவை. ராக், கெல்ப் மற்றும் கடல் லெட்யூஸ் போன்ற பழுப்பு நிற கடல்பாசிகள் அல்கோதெரபியில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் கார்போஹைட்ரேட்கள், புரதங்கள், என்சைம்கள், ஃபைபர், மினரல்கள், மேலும் இது உடலில் தாதுப்பொருட்களைக் கூட்டுகிறது-. ஐயோடின் மற்றும் கடல் உட்பொருட்களை அதிக அளவில் உட்கிரகிப்பதால் -உடலில் இருந்து நச்சுப்பொருட்கள், வியர்வையாக வெளியேறி விடுகின்றன.

நிவாரணங்கள்: உடலின் நிணநீர் சுற்றோட்டத்தை தூண்டுவதால், எலும்பு, தசை காயங்களை சரிசெய்ய உதவுகிறது. சரும நோய்கள், எடை சிக்கல், செரிமான சிக்கல் போன்றவற்றையும் சரிசெய்கிறது.




குணமளிக்கும் ஸ்பரிசம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு