இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைத்து, ஒரு சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்படுமாறு இங்கிலாந்து அரசாங்கத்திடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சுமார் 500 வரையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பெயர்களுடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொமின் ரப் எம்.பி, தென்னாசியா மற்றும் கொமன்வெல்த் நாடுகளிற்கான அமைச்சர் அஹமட் ஆகியோருக்கு எழுதப்பட்ட கடித பிரதிகள் பிரித்தானிய பிரதமர் உள்ளிட்டவர்களிற்கும் பிரதியிடப்பட்டுள்ளது..
அண்மையில் தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை சுட்டிக்காட்டி, இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கையெடுக்க கோரப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..