15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

தூக்கில் தொங்கிய டிக் டாக் பிரபலம்

சமீப காலமாக சினிமா நடிகர் நடிகைகளை விட அதிக புகழை பெற்று வருபவர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துபவர்கள் தான். தற்போது அதை தடை செய்தவுடன் அனைவரும் இன்ஸ்டாகிராம் பக்கம் படையெடுத்து வருகின்றனர்.டிக் டாக் போன்ற செயலிகளில் தங்களுடைய நடிப்பு திறனை காட்டி பலரும் தற்போது யூடியூப், சினிமா என தங்களுடைய வளர்ச்சியை அதிகப்படுத்தி வருகின்றனர். மேலும் சிலருக்கு இது பயங்கர பொழுதுபோக்கு தளமாகவும் இருந்து வருகிறது.அந்த வகையில் டிக் டாக் செயலியின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அமெரிக்காவின் லூசியானா நகரத்தை சேர்ந்தவர் தஸாரியா(dazhariaa shaffer). அமெரிக்காவைப் பொருத்தவரை டிக் டாக் செயலில் கொடிகட்டி பறந்தவர் தசாரியா தானாம்.மேலும் நீண்ட காலமாக தசாரியா ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களாக பிரச்சினை மேல் பிரச்சினை வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தசாரியா உணர்ச்சிவசப்பட்டு திடீரென நள்ளிரவில் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி விட்டாராம். இது தனிமையில் இருக்கும்போது தசாரியா எடுத்த தனிப்பட்ட முடிவு தான் என்கிறார்கள்.ஆனால் போலீசார் தசாரியாவின் காதலரை விசாரணை செய்து வருகிறார்களாம். டிக் டாக்கில் மிகப் பெரிய புகழ்பெற்ற தசாரியாவின் மரணம் அந்த நாட்டு ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




தூக்கில் தொங்கிய டிக் டாக் பிரபலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு